Thursday, October 7, 2010

முருகனைக் கும்பிட்டு...........




இந்து மதக் கடவுள்களுள் மிக அதிக எண்ணிக்கையிலான பக்தர்களைக் கொண்டிருப்பவர் ஸ்ரீ முருகப்பெருமான். கலியுகத் தெய்வமாய், கண் கண்ட தெய்வமாய் விளங்குபவர். அவர் சார்ந்த செய்திகள், அவர் எழுந்தருளியுள்ள கோயில்கள், அவரைப் பற்றி வெவ்வேறு கால கட்டங்களில் பாடப்பட்ட பாடல்கள் என அனைத்து தகவல்களைக் கொண்ட பொக்கிஷமாக ஒரு இணையத் தளம் மிக நீண்ட நாட்களாக இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர்கள் மலேஷியா நாட்டைச் சார்ந்த திருவாளர் சேந்தன்-வள்ளி தம்பதிகள். உலகெங்கிலும் உள்ள முருகன் ஆலயங்கள்  அனைத்தையும் சென்று தரிசித்து அத்துணை ஆலயங்களைப்பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். உண்மை பக்தியை பறைசாற்றும் செயல். முருகக் கடவுள் மீது பக்தி கொண்டு விளங்குவோர் அவசியம் பார்க்க வேண்டிய இணையத்தளம் இது.