Sunday, October 10, 2010

அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை!

"உலகமெல்லாம் போற்ற ஒளி வடிவனாகி 
இலக அருள் செய்தான் இசைந்தே - திலகன் என 
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான் 
தானே எனக்குத் தனித்து" 
- திருஅருட்பா  ஆறாம் திருமுறை 1685


வள்ளர்பெருமானார்  வரலாற்றுக்  குறிப்புகள்  

இயற்பெயர் : இராமலிங்கம்
சிறப்புப்பெயர் : திரு அருட்பிரகாச வள்ளலார் 
அவதாரம் : 5.10.1823, சுபானு புரட்டாசி 21 சித்திரை நட்சத்திரம், ஞாயிறு 
அவதரித்த ஊர் : மருதூர், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம்
பெற்றோர் : இராமையா - சின்னம்மையார் 
உடன் பிறந்தோர் : சபாபதி, சுந்தராம்பாள், பரசுராமர், உண்ணாமலையம்மாள் 

வாழ்ந்த இடங்கள் : சென்னை                                                            1824 - 1858 
                                        கருங்குழி (கடலூர் மாவட்டம் )               1858 - 1867 
                                        வடலூர்                                                                  1867 - 1870 
                                        மேட்டுக்குப்பம்                                                   1870

பதிப்பித்த நூல்கள் : ஒழிவில் ஒழுக்கம்                                       1851 
                                         தொண்டமண்டல சதகம்                             1855  
                                          சின்மய தீபிகை                                               1857

இயற்றிய நூல்கள் : மனுமுறை கண்ட வாசகம்                               
                                    ஜீவகாருண்ய ஒழுக்கம் 

அருளிய பாடல்கள் : திரு அருட்பா (ஆறு திருமுறைகள்) 

நிறுவிய நிலையங்கள் : சன்மார்க்க சங்கம்                             1865 
                                                    சத்திய தருமச்சாலை                        1867 
                                                    சத்திய ஞான சபை                            1872 
                                                   சித்தி வளாகம்                                       1870

அருட்பெருஞ்சோதி 
ஆண்டவரானது           :  30.01.1874, ஸ்ரீமுக, தை 19, வெள்ளிகிழமை இரவு  12 மணி 

சன்மார்க்க நெறிகள்
  1. கடவுல் ஒருவரே - அவரே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் 
  2. சிறுதெய்வ வழிபாடு தவிர்த்தல் வேண்டும். தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி செய்யாதிருத்தல் வேண்டும் 
  3. பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்ய ஒழுக்கமே மோட்ச வீட்டின் திறவுகோல் 
  4. உலக அமைதிக்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் 
  5. மது, மாமிசம் உண்ணாதிருத்தல் வேண்டும் 
  6. சாதி, இனம், சமயம், மதம், மொழி, தேசம் முதலிய வேறுபாடின்றி இருத்தல் வேண்டும் 
  7. எக்காரியத்திலும் பொது நோக்கம் வேண்டும் 
  8. உயிர் இரக்கமே உண்மையான பிரார்த்தனை ஆகும் 
  9. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 
  10. சாகாதவரே சன்மார்க்கி 

நன்றி: திரு அருட்பிரகாச வள்ளலார் 188 - வது ஆண்டு அவதார தின விழா அழைப்பிதழ்.

அருட்பெருஞ்சோதி!  அருட்பெருஞ்சோதி!  
தனிப்பெருங்கருணை!  அருட்பெருஞ்சோதி!